ஐ.எஸ் வெறியாட்டம்! அடுத்தடுத்து நடந்த பயங்கர தாக்குதல்.. 13 பொலிசார் படுகொலை: பரபரப்பு வீடியோ
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 13 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
Kirkuk நகரிலே இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Tal Steeh கிராமத்தில் ஈராக் மத்திய பொலிஸிக்கு சொந்தமான இராணுவ சோதனை சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
Tal Steeh கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மற்றொரு ஈராக் மத்திய பொலிஸ் குழு வாகனங்களை குறிவைத்து ஐ.எஸ் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கிட்டதட்ட 11 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் 6 பேர் காயமடைந்தனர், மேலும் இராணுவ வாகனம் எரிந்து நாசமானது என உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
It looks like ISIS in Iraq is feeling the American weakness. Heavy attacks on security forces near Kirkuk tonight with several police forces killed. pic.twitter.com/e9lu5G0t2m
— WorldOnAlert (@worldonalert) September 4, 2021
இதனிடையே, Kirkuk-Tikrit சாலையில் Yingja துணை மாவட்டத்தில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் Hashid al-Shaabi-யின் ஒரு பிரிவை குறிவைத்து தாக்கியுள்ளனர், இதில் Hashid al-Shaabi வீரர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.