பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 பேர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான குஜராத், பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தின் போது பலரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்துள்ளனர். இதில் இருந்து 13 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த இடிபாடுகளுக்குள் பலரும் சிக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதோடு, இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |