13 வயது சிறுவனின் பயங்கர செயல்: பல்பொருள் அங்காடியில் அலறிய வாடிக்கையாளர்கள்
அவுஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் 13 வயது சிறுவன், வயதான ஊழியர் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்திக்குத்து
பிரிஸ்பேனின் தென்மேற்கே அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானார்.
கிளாடியா காம்போமயர் (63) என்ற அந்த ஊழியரை முதுகில் குத்தியது 13 வயதுடைய சிறுவன் என தெரிய வந்தது.
அவர் குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவன் கைது
இதற்கிடையில் கடைக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் குறித்த சிறுவனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுவனை கைது செய்தனர்.
டசன் கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் இளம் குழந்தைகள் உட்பட ஊழியர்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ள சிறுவன் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |