தாமதமாக வந்ததால் 100 தோப்புக்கரணம்: உயிரிழந்த 13 வயது மாணவி
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பாடசாலை மாணவி, 100 தோப்புக்கரணம் போட்ட பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரில் உள்ள பாடசாலையில் 6ஆம் வகுப்பு படித்து வந்தவர் காஜல் கோண்ட்.
13 வயதான இந்த சிறுமி வகுப்பிற்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஆசிரியர் சிறுமிக்கு தண்டனை தரும் வகையில் புத்தகப் பையுடன் 100 தோப்புக்கரணம் போட வைத்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் சிறுமிக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |