13 ஆண்டுகளுக்கு பிறகு! டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய தேசிய கீதம்.. அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த தருணம்
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றதையடுத்து 13 ஆண்டுகள் கழித்து இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
டோக்கியோவில் நேற்று நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளப்பிரிவில் முதல் தங்கப்பதக்கத்தை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். தங்க பதக்கம் வென்றவர்களின் நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கமாகும்.
அதன்படி நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் இந்திய தேசிய கீதம் ஒலித்தது. முதல்முதலாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு முதல் ஆட்டத்திலே 87.58 மீ. ஈட்டியை எய்து வரலாற்று சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் நிரஜ் சோப்ரா.
கடைசியில் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்.
அப்பொழுது இந்திய தேசிய கீதம் கடைசியாக ஒலிக்கப்பட்டது. அதன் பிறகு 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் மீண்டும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
இதனால் இந்திய மக்கள் இரட்டிப்பு சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.