ரூ.130 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு: சேவாக் பங்களாவில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் டெல்லியில் கட்டியுள்ள சுமார் ரூ.130 கோடியில் பிரமாண்ட சொகுசு வீடு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கிரிக்கெட் வீரர் சேவாக்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் ஓய்வு பெற்று இருந்தாலும், இன்று வரை கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை முச்சதம் அடித்த வீரர் என்று பெருமை பெற்ற ஒரே இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் மட்டும் தான்.
2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை என இரு தொடர்களிலும் இந்திய அணியின் வெற்றிக்கு சேவாக் முக்கிய பங்காற்றியுள்ளார்.
கிரிக்கெட் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது, அத்துடன் 2010ம் ஆண்டு சிறந்த ஐசிசி டெஸ்ட் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
130 கோடி சொகுசு பங்களா
நஜாப்கர் போன்ற சாதாரண பின்னணியில் இருந்து வந்த சேவாக், தெற்கு டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
அவர் சுமார் ரூ 130 கோடி மதிப்பில் கட்டியுள்ள சொகுசு பங்களாவிற்கு தனது தாயின் நினைவாக “கிருஷ்ணா நிவாஸ்” என பெயரிட்டுள்ளார்.
பிரம்மாண்ட நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு எளிமைக்கும் வசதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
கிருஷ்ணா நிவாஸ் பங்களா, அழகிய மரவேலைப்பாடுகள் நிறைந்ததாகவும், மிதமான வண்ணங்கள் மற்றும் இதமான விளக்குகளுடனும் அலங்கரிக்கப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேவாக் குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக கிட்டத்தட்ட 13 அறைகள் கொண்ட வீடாக இது கட்டப்பட்டுள்ளது.
அதிக இறை நம்பிக்கை கொண்ட சேவாக், தன்னுடைய வீட்டில் தினசரி வழிபாடுகள் செய்வதற்காக அமைதியான கோயில் ஒன்றையும் கட்டி எழுப்பியுள்ளார்.
கிரிக்கெட் வாழ்க்கையில் தான் வென்ற கோப்பைகள், விருதுகள் மற்றும் நினைவு பொருட்களை பாதுகாக்க மற்றும் காட்சிப்படுத்த எதுவாக ஒரு தனிப்பட்ட அருங்காட்சியகம் ஒன்றையும் சேவாக் வடிவமைத்துள்ளார்.
130 ரூபாய் கோடி மதிப்பில் கட்டிய பரந்த விரிந்த இந்த வீட்டில் நேர்த்தியான தோட்டம் காண்போரை மயக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த தோட்டத்தில் தான் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் கிரிக்கெட் நுணுக்கங்களை அவர் பயிற்றுவித்து வருகிறார்.
அதைப்போல செல்லப்பிராணிகள் மீது தனிப் பிரியம் கொண்ட சேவாக், தன்னுடைய வளர்ப்பு நாய்கள் விளையாடுவதற்காக தனியாக புல்வெளி பகுதி ஒன்றை ஒதுக்கியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |