உலகில் இப்படி ஒரு இடமா? சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வித்தியாசமான ஹோட்டல்.. ருசிகர தகவல்
ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பழமையான விடயங்களுக்கு எப்பவுமே மதிப்பு அதிகம். சில இடங்கள் கண்டுபிடிக்காமல் அப்படியே அழிந்ததும் உண்டு. அதுபோல சில இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மிகப்பெரிய பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம்.
அந்த வகையில் ஜப்பானில் ஒரு பழமையான ஹோட்டல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் ஜப்பானின் யமனாஷி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நிலையில் இது சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
Nishiyama Onsen Keiunkan எனப்படும் இந்த ஹோட்டல் 705ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை செயல்பட்டு வருகின்ற பெருமை இந்த ஹோட்டலை சேரும்.
இந்நிலையில் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொரியன் வங்கி அறிக்கையின்படி யமனாஷி மாகாணத்தில் உள்ள ஹயகாவாவில் அமைந்துள்ள Nishiyama Onsen Keiunkan என்கின்ற ஹோட்டல் கி.பி 705இல் நிறுவப்பட்டது.
அப்போதிலிருந்து 1,300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 52 தலைமுறைகளால் இந்த ஹோட்டல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர். அதுபோல ஜப்பான் சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த ஹோட்டலுக்கு செல்லம்மால் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.