கனடாவில் ஒரே வீட்டுக்குள்ளிருந்த 135 பூனைகள்: உரிமையாளரின் அறியாமை
கனடாவில் வீடு ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் மீட்கப்பட்டன.
ஒரே வீட்டுக்குள்ளிருந்த 135 பூனைகள்
கனடாவில், வீடு ஒன்றில் 135 பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 41 பூனைக்குட்டிகளும், குட்டிகளுக்கு பால் கொடுக்கும் 11 பூனைகளும், குட்டிகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஐந்து பூனைகளும் அடக்கம்.
அந்த பூனைகள் அனைத்தும் இரண்டு கட்டமாக மீட்கப்பட்டு ரொரன்றோவுக்கு கொண்டுவரப்படுகின்றன.
blogto
உரிமையாளரின் அறியாமை
அந்த பூனைகள் எந்த இடத்தில் இருந்து மீட்கப்படுகின்ரன என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
விடயம் என்னெவென்றால், இந்த பூனைகள் ஆண்டொன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறை, ஒரே நேரத்தில் பல குட்டிகளை ஈனும். ஒரு முறைக்கு ஒரு பூனை நான்கு அல்லது ஐந்து குட்டிகளை ஈனும்.
அதனால் சீக்கிரத்தில் அந்த வீட்டில் பூனைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு பெருகிவிடும் என்பது அந்த பூனைகளின் உரிமையாளருக்குத் தெரியவில்லை என்கிறார் விலங்குகள் நல அமைப்பு அதிகாரியான Cassandra Koenen.
A photograph provided by Toronto Cat Rescue
மீட்கப்படும் இந்த பூனைகள் மருத்துவ கண்காணிப்புக்குப் பின் தத்துக்கொடுப்பதற்கு தயாராகிவிடும்.
iheartradio