ஹமாஸ் பிடியில் மீதம் இருக்கும் பிணைக் கைதிகள் எத்தனை பேர்? முழு விவரம்
ஹமாஸ் பிடியில் இன்னும் 137 பிணைக் கைதிகள் இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
நீர்த்துப் போன போர் நிறுத்தம்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் 2வது முறையாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், காசாவில் மீண்டும் ராணுவ தாக்குதலை தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹமாஸ் படையினர் போர் நிறுத்தத்தை மீறி விட்டதாகவும், போர் நிறுத்தத்தை மதிக்காமல் 2 ராக்கெட் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
137 பிணைக் கைதிகள்
இந்நிலையில் ஹமாஸ் படையினர் பிடியில் இன்னும் 137 பிணைக் கைதிகள் இருப்பதாக இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவியை மேற்கோள் காட்டி, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் மொத்தமாக இதுவரை 110 பேர் வீடு திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது.
தரவுகளின் படி, ஹமாஸ் படையினரிடம் உள்ள பிணைக் கைதிகளில் 115 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள், 3 குழந்தைகள் உள்ளனர், அதில் 10 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 137 பிணைக் கைதிகளில் 126 பேர் இஸ்ரேலியர்கள் என்றும், 11 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |