அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு
14 Dead After Two Mass Shooting At US: அமெரிக்காவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் சில மணி நேரங்களில் நடந்த அடுத்தடுத்த இரண்டு துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு ஜார்ஜியா மாகாணத்தின் டக்ளஸ் நகர் குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு அவசர அழைப்பு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் 5 பேர் வரை உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
அதே நேரத்தில் பென்சில்வேனியாவின் ஈரி நகரில் நடந்த கோரமான மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் உயிரிழந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் மைக்ரோஃபோன் நெட்வொர்க்குகளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கண்டறியும் ஷாட்ஸ்பாட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தன்னுடைய 28 ஆண்டுகால காவல் பணியில் இப்படியொரு பேரழிவுகரமான தாக்குதலை கண்டதில்லை என ஈரி நகர காவல் துறைத் தலைவர் ரிக் லோர அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.