காங்கோ விமான விபத்து; 2 ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
14 dies in congo plane crash: காங்கோ விமான விபத்தில் 2 ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ விமான விபத்து
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசின் தென்மேற்கில் உள்ள கிக்விட்டில் இருந்து ராணுவ விமானம் ஒன்று தலைநகர் கின்ஷாசாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கெங்கே என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், இராணுவ நீதிமன்றத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முடம்போ கடலாயி டியெண்டே மற்றும் ஆயுதப் படைகளின் தலைமைத் தணிக்கையாளரான லெப்டினன்ட் ஜெனரல் பக்குமி லிகுலியா உட்பட விமானத்தில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காங்கோ இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் எஃபோமி எகெங்கே தெரிவித்துள்ளார்.