இந்தோனேசியாவில் ஒரு பாரிய ரயில் விபத்து: 14 பேர் பலி, 84 பேர் படுகாயம்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவுக்கு அருகில் நிகழ்ந்த ரயில் விபத்தொன்றில் 14 பேர் பலியான சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அந்த விபத்தில் 84 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், சிலர் இன்னமும் நசுங்கிய ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஒரு பாரிய ரயில் விபத்து
நேற்று மாலை, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவுக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள Bekasi என்னுமிடத்தில், ரயில் நிலையம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது, வேகமாக வந்த ரயில் ஒன்று மோதியுள்ளது.

ரயில்கள் இரண்டும் மோதிக்கொண்டதில், நின்றுகொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் நசுங்கி, அந்த ரயிலிலிருந்த 14 பேர் உயிரிழந்துள்ளார்கள். 84 பேர் காயமடைந்துள்ளார்கள்.
சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன. ஆனால், அந்த பெட்டிகள் நசுங்கிப்போயிருப்பதால் அவர்களை மீட்பது கடினமான பணியாக உள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |