புத்த மடாலயம் மீது குண்டு வீசிய மியான்மர் ராணுவம் - 14 பேர் உயிரிழப்பு
புத்த மடாலயம் மீது மியான்மர் ராணுவம் குண்டு வீசியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
புத்த மடாலயம் மீது குண்டு வீச்சு
மியான்மரில் 2021 ஆம் ஆண்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அவ்வப்போது ராணுவத்திற்கும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக அவ்வப்போது பொதுமக்கள் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மியான்மரின் மியாங் நகரிலுள்ள ஸ்வெல் லே ஓ கிராமத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது. அதில் ஒரு வார கால தியான நிகழ்ச்சி நடைபெற்று வந்ததால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று காலை ராணுவ விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் 2 குண்டுகளை மடாலயத்தில் வீசியுள்ளது.
இதில், 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைத் தகனம் செய்த பிறகு, குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குத் தப்பிச் சென்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |