14 மில்லியன் உக்ரேனியர்கள் இடம்பெயர்வு! ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 14 மில்லியன் உக்ரேனிய மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை
உக்ரேனியர்கள் கடுமையான குளிர்காலங்களில் ஒன்றை சந்திக்க உள்ளதாக ஃபிலிப்போ கிராந்தி எச்சரிக்கை
ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து 14 மில்லியன் உக்ரேனிய மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் ஒன்பது மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரினால் உக்ரேனிய மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.நா சபை கூட்டத்தில் புலம்பெயர்ந்தோருக்கான உயர் ஆணையர் ஃபிலிப்போ கிராந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது,
'உக்ரைன் மீது பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 14 மில்லியன் உக்ரேனியர்கள், தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இடம்பெயர்வு நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறை ஆகும்.
(AP Photo/Markus Schreiber, File)(Markus Schreiber / Associated Press)
உலகின் மிகவும் கடுமையான குளிர்காலங்களில் ஒன்றை உக்ரேனியர்கள் இந்த ஆண்டு எதிர்கொள்ள உள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதில் எங்கள் கவனம் அதிகரித்துள்ளது. மனிதாபிமான நிறுவனங்கள் தங்கள் பங்காற்றலை இன்னும் அதிகரிக்க வேண்டும்' எனக் கூறினார்.
FILIPPO GRANDI (TWITTER)