ஈரான் - அமெரிக்கா இடையே உருவான அமைதி: வெளியான 14 அம்ச வரை வரைவு ஒப்பந்தம்
அமெரிக்கா - ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் தொடர்பான 14 முக்கிய வரைவு அம்சங்களை ஈரானிய செய்தி ஊடகமான மெஹ்ர்(Mehr) வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து ஈரானிய அரசோ, அமெரிக்காவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெஹ்ர் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, அமெரிக்கா - ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தில் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான முக்கிய நிபந்தனைகளை இடம் பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
ஈரான், லெபனான் உட்பட அனைத்து போர் முனைகளிலும் தாக்குதலை உடனடியாக நிறுத்துதல்.
ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட கூடாது மற்றும் ஈரானின் இறையாண்மையை அமெரிக்க மதிக்க வேண்டும்.
ஈரானை சுற்றியுள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுதல் மற்றும் எதிர்காலத்தில் இந்த பிராந்தியங்கள் மீண்டும் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவதோ அல்லது புதிய தடைகளை விதிக்கவோ கூடாது.

30 நாட்களுக்குள் ஹார்முஸில் அமெரிக்க கடற்படையின் முற்றுகையை நீக்கி ஈரானின் முன்னெடுப்புகளின் படி மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை திறத்தல்.
ஈரான் எண்ணெய் மற்றும் எரிசக்தி மீதான அமெரிக்க பொருளாதார தடையை நீக்குதல்.
போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை சரி செய்ய அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈரானுக்கு 300 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டங்களை வழங்க வேண்டும்.
அணு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை திடமாக மீண்டும் உறுதிப்படுத்துதல்.
ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளில் 50% விடுவித்தல். இவை இறுதியாகும் பட்சத்தில் ஐ.நாவின் பாதுகாப்பு சபை தீர்மானத்தின் மூலம் இது அங்கீகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |