14 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது பிரான்ஸ்: சட்டவிரோதமாக நுழைந்ததால் நடவடிக்கை
இலங்கையர்களை 14 பேரை மீண்டும் அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு பிரான்ஸ் அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
நாடு கடத்தல்
இந்த மாதத்தின் தொடக்கத்தில் கடல் வழியாக பிரான்ஸ் நாட்டு ரீயூனியன் தீவிற்கு சென்ற 7 இலங்கையர்கள் உட்பட மொத்தம் 14 பேரை பிரான்ஸ் அரசாங்கம் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டிற்கு நுழைய முயன்ற நிலையில், அவர்கள் பிடிக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்துள்ளனர். இதில் 21 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |