தண்டவாளத்தில் அமர்ந்து கேம் விளையாடிய சிறுவர்கள்: அடுத்து நேர்ந்த பயங்கரம்
இந்திய மாநிலம் சத்தீஷ்கரில் சிறுவர்கள் இருவர், தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியபோது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
செல்போனில் கேம்
சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டத்தில் உள்ள ரிசலி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவர்கள் வீர் சிங், புரன் ஷகு.
இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர்.
அப்போது ரயில் வருவதையும் கவனிக்காமல் இருவரும் செல்போனில் மூழ்கி இருந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் வீர் சிங், புரன் ஷகு சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மொபைலில் மூழ்கி இருந்த சிறுவர்கள்
சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், சிறுவர்கள் இருவரும் ரிசலி செக்டார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் இருவரும் ரயிலின் ஹாரன் சத்தம் கேட்காத அளவுக்கு தங்கள் மொபைலில் மூழ்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றிய அவர்கள் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |