தென்கிழக்கு லண்டனில் துயர சம்பவம்: பேருந்தில் 14 வயது சிறுவன் குத்திக் கொலை
லண்டனில் பேருந்தில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனுக்கு கத்திக்குத்து
தென்கிழக்கு லண்டனின் வூல்விச்சில்(Woolwich) ஓடும் பேருந்தில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வூல்விச் சர்ச் சாலை மற்றும் A205 தெற்கு வட்ட சாலையின் சந்திப்புக்கு அருகிலும், வூல்விச் கப்பல் துறைக்கு அருகிலும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவசர சேவைகள் பிற்பகல் 2:28 மணிக்கு சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், சிறுவன் தீவிர கத்திக்குத்து காயங்களுடன் இருந்தார், அவருக்கு உடனடி மருத்துவ உதவி கொடுக்கப்பட்ட போதிலும், அவர் தனது காயங்களுக்கு உயிரிழந்தார்.
கவலை தெரிவித்துள்ள உள்ளூர்வாசி
இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள உள்ளூர்வாசி ஒருவர், "இரவு நேரங்களில் நான் அடிக்கடி வீட்டிற்கு செல்கிறேன். இங்கு வெளியே இருப்பது எனக்கு மிகவும் பயமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
லண்டன் மேயர் சர் சாதிக் கான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில் "14 வயது சிறுவனின் கொடூரமான கொலைக்குப் பிறகு கிரீன்விச்சில் உள்ள குடும்பம், நண்பர்கள் மற்றும் பரந்த சமூகம் ஆகியோருடன் என் சிந்தனைகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
மெட்ரோபொலிட்டன் போலீசார் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர் மற்றும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |