சிங்கங்கள், யானைகள் நிறைந்த காட்டில் தொலைந்து போன சிறுவன்: 5 நாட்களுக்கு பிறகு நடந்த அதிசயம்!
ஜிம்பாப்வே தேசிய பூங்காவில் தனியாக தொலைந்து போன சிறுவன் ஐந்து நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே காட்டில் காணாமல் போன சிறுவன்
ஜிம்பாப்வே-யின் கிராமப்புற கரிபா(Kariba) நகரில் உள்ள நியாமினியாமியைச்(Nyaminyami) சேர்ந்த டினோடெண்டா புடு(Tinotenda Pudu) என்ற சிறுவன், டிசம்பர் 27 அன்று தனது வீட்டிலிருந்து காணாமல் போனார்.
இதையடுத்து சிறுவன் மடூசடோனா தேசிய பூங்காவில் காணாமல் போயிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, பூங்கா வனவர், பொலிஸார் மற்றும் உள்ளூர் சமூகத்தினர் நடத்திய முதல் கட்ட தேடுதல் நடவடிக்கை கனமழை காரணமாக பாதிக்கப்பட்டது.
💫 A boy missing & found in Matusadonha game park
— Mutsa Murombedzi MP🇿🇼 (@mutsamu) January 1, 2025
A true miracle in remote Kasvisva community, Nyaminyami in rural Kariba, a community where one wrong turn could easily lead into a game park. 8-year-old Tinotenda Pudu wandered away, lost direction & unknowingly headed into the… pic.twitter.com/z19BLffTZW
அதே வேளையில், டினோடெண்டா புடு வறட்சியான பகுதியில் வளர்ந்த தனது உயிர்வாழ்வு திறன்களை வெளிப்படுத்தி ஆபத்தான காட்டில் உயிர் பிழைத்து வந்துள்ளார்.
அவர் காட்டுப் பழங்கள் மற்றும் தண்ணீருக்கு வறண்ட ஆற்றுப்படுகையில் தடியால் சிறு கிணறுகளை தோண்டியுள்ளார்.
உயிர் பிழைத்த சிறுவன்
சிங்கங்கள், யானைகள் மற்றும் கருப்பு காண்டாமிருகங்களுக்காக புகழ்பெற்ற இந்த பூங்கா, தொலைந்து போன குழந்தைக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால் தேடல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்டது.
இறுதியில் வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள மடூசடோனா தேசிய பூங்காவில் காணாமல் போன ஒரு சிறுவன் ஐந்து நாட்களுக்குப் பிறகு அதிசயமாக உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான்.
💐UPDATE on young boy Tinotenda Pudu who got lost & was found in lion infested Matusadonha Game Park
— Mutsa Murombedzi MP🇿🇼 (@mutsamu) January 4, 2025
I engaged with the Permanent Secretary in the Ministry of Health and Child Care & the Provincial Medical Director for Mashonaland West called me regarding Tinotenda’s well-being… pic.twitter.com/mHek9fi6YY
சவாலான நிலப்பரப்பை மீறி, சிங்கங்கள் நிறைந்த பூங்காவின் வழியாக தோராயமாக 49 கிலோமீட்டர் (30 மைல்) நடந்து சென்ற பிறகு டினோடெண்டா கண்டுபிடிக்கப்பட்டார்.
உள்ளூர் கிளினிக்கில் முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, டினோடெண்டா மேலும் மருத்துவ பரிசோதனைக்காக பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஜிம்பாப்வே பாராளுமன்ற உறுப்பினர் முட்சா முரோம்ப்வேதி, தினோடெண்டாவின் உயிர் பிழைத்ததை "உண்மையான அதிசயம்" என்று விவரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |