10 வயது சிறுமியை சீரழித்துக் கொலை செய்த 14 வயது சிறுவன்... எங்கே செல்கிறது இந்த உலகம்?
உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதே புரியவில்லை...
சிறு பிள்ளை ஒருத்தியை, அவளது உறவினனான சிறுவன் ஒருவனே வன்புணர்ந்து கொலையும் செய்துள்ளான் அமெரிக்காவில்.
அமெரிக்காவிலுள்ள Wisconsin என்ற இடத்தில் வாழும் Carson Peters-Berger (14) என்ற சிறுவன், தனது தந்தையின் சொந்த அக்காவின் மகளான Lily Peters (10) என்ற சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளான்.
தனது அத்தை வீட்டுக்குச் சென்ற Lily இரவு 8.00 மணி வரை வீடு திரும்பாததால், அவளது தந்தையான Alex Peters (43) பொலிசில் புகாரளித்திருக்கிறார்.
தேடுதல் வேட்டையின்போது, Lilyயுன் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் Lilyயை அவளது மாமாவின் மகனான Carson கொலை செய்தது தெரியவந்தது.
பதினான்கே வயதான Carson, அந்தச் சிறுமியை வயிற்றில் குத்தி, கீழே தள்ளி, கட்டையால் தாக்கி, வன்புணர்ந்து, பின் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறான். ஒரு 14 வயது சிறுவனிடம் இவ்வளவு வன்மம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
இதற்கிடையில், அவனது பின்னணியைப் பார்க்கும்போது, அவன் Adam Berger (37) என்ற நபருக்கும், Lauri Davis (45) என்ற பெண்ணுக்கும் இடையிலான குறுகிய கால உறவால் பிறந்தவன்.
Adam குழந்தைகளின் ஆபாச படங்கள் வைத்திருந்ததற்காக சிறை சென்றவர். Lauri போதைக்குற்றங்கள் உட்பட பல குற்றங்களுக்காக சிறை சென்றவர்.
கொலை செய்யப்பட்ட Lilyயைப் பார்த்தால், அவளது தாயான Jennifer Eyerly (38)ம் இப்போதுதான் சிறை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார். அவர் தற்போது தன் கணவருடன் இல்லை...
ஆக, யாரைக் குற்றம் சொல்வதென்று தெரியவில்லை, பரிதாபமாக ஒரு சிறுமி பலியாகிவிட்டாள்!