லண்டனில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொலை: 3 இளைஞர்கள் கைது
லண்டனில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு
வியாழக்கிழமை மதியம் தென்கிழக்கு லண்டனின் உல்விச் பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் 14 வயது, 16 வயது மற்றும் 18 வயதுடைய 3 சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மூன்று நபர்களும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு பொலிஸார் மற்றும் சிறப்பு அதிகாரிகள் குழு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடந்தது என்ன?
உல்விச் படகுத் துறை மற்றும் டக்யார்ட் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள லார்ட் வார்விக் தெருவில் மாலை 3.40 மணிக்கு 14 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சிகிச்சை குழுவினர் தீவிரமாக முயன்று சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |