145 மெகாபிக்சலில் எடுக்கப்பட்ட சூரியனின் துல்லியமான புகைப்படம்! இணையத்தை அதிரவைத்த ரெட்டிட் பயனர்
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் கைப்பற்றப்பட்ட சூரியனின் தெள்ளத்தெளிவான புகைப்படத்தை reddit பயனர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் Reddit-ல் ajamesmccarthy என்ற பயனரால் பகிரப்பட்டது.
145 மெகா பிக்சலில் கைப்பற்றப்பட்ட இந்த ஆச்சரியமான புகைப்படம் சமூக ஊடக தளத்தில் ஏராளமான பயனர்களை கவர்ந்துள்ளார்.
இப்போது வைரலான படம், பிளாஸ்மாவின் சிற்றலைகளால் மூடப்பட்டிருக்கும் சூரியனின் மேற்பரப்பின் விரிவான அமைப்பைக் காட்டுகிறது.
இந்தப் புகைப்படம் Reddit-ல் ajamesmccarthy என்ற பயனரால் பகிரப்பட்டது. அதில் அவர் "நான் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்ட தொலைநோக்கியைப் பயன்படுத்தி நமது சூரியனின் 145-மெகாபிக்சல் படத்தைப் பிடித்தேன். பெரிதாக்கி பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
PC:reddit/ajamesmccarthy
பகிரப்பட்டதிலிருந்து, இந்த பதிவு ஆயிரக்கணக்கிலான லைக்குகளையும் ஏராளமான கருத்துகளையும் குவித்துள்ளது. பார்வையாளர்கள் படத்தின் தரத்தைக் கண்டு திகைத்தனர்.
படத்தைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட தொலைநோக்கி மாற்றியமைக்கப்பட்டதாக பயனர் கூறினார். வெறும் கண்களால் அல்லது வழக்கமான தொலைநோக்கி மூலம் சூரியனை நேரடியாகப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்பது அனைவரும் அறிந்த உண்மை.