மனித உடலை வாயில் கவ்வியபடி சுற்றித் திரிந்த 14 அடி ராட்சத முதலை: மீட்பு குழு எடுத்த நடவடிக்கை
அமெரிக்காவில் மனித உடல் எச்சங்களுடன் சுற்றித் திரிந்த 14 அடி முதலையை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
மனித எச்சத்துடன் சுற்றித்திரிந்த முதலை
அமெரிக்காவின் புளோரிடா கால்வாயில் மிகப்பெரிய முதலை ஒன்று உயிரற்ற மனித உடலை தன் வாயில் கவ்விக் கொண்டு சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிளியர்வாட்டருக்கு தெற்கே 4 மைல் தொலைவில் உள்ள சிறிய சமூகமான லார்கோ(Largo) குடியிருப்பு வீதியில் 14 அடி முதலை ஒன்று மனித உடல் எச்சங்களை தாடையில் கவ்வியபடி சுற்றித் திரிவது பார்க்கப்பட்டது.
holly gregory/X
இறப்புக்கு முன் உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
இதையடுத்து உடனடியாக லார்கோ தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் முதலையை நீரில் இருந்து இழுத்து சில முறை சுட்டனர்.
இதற்கிடையில் முதலைகள் வழக்கமாக இப்பகுதியில் சுற்றித் திரிவது வழக்கம் என்றும், ஆனால் வெள்ளிக்கிழமை மனிதர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்த்த முதலை மிகப்பெரிய ஒன்று என்று டீன் தெரிவித்துள்ளார்.
holly gregory/X
இந்நிலையில் விசாரணை குழு முதலையின் வாயில் சிக்கி இருந்த மனிதரின் இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |