பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 15 குழந்தைகள் உயிரிழப்பு
15 infants dies in pakistan hospital fire: பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக(PIMS) மருத்துவமனை இயங்கி வருகிறது.

இங்குள்ள தாய் மற்றும் குழந்தை நலப் பிரிவின் மூன்றாவது மாடியில் உள்ள மகப்பேறு மருத்துவப் பிரிவில், இன்று காலை சுமார் 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு விரைந்த மீட்புக்குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அங்கிருந்தவர்களை உடனடியாக வெளியேற்ற தொடங்கினர்.
உள்ளே 16 குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
குளிரூட்டும் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |