15 மனைவிகள், 100 வேலையாட்கள் - விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஆப்பிரிக்க மன்னர்
15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் ஆப்பிரிக்க மன்னர் வந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
எஸ்வாட்டினி மன்னர்
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான எஸ்வாட்டினி(Eswatini) என்ற நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம் மெஸ்வாட்டி(Mswati).
1986 ஆம் ஆண்டு முதல் இவர் அந்த நாட்டின் மன்னராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்கள் படைசூழ தனி விமானத்தில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#AbuDhabi airport witnessed a spectacle when King Mswati III of Eswatini arrived with 15 wives, 30 children and more than 100 attendants, with netizens saying "an entire village has arrived". #polygamy #africa #monarch #KingMswati #eSwatini #Africa pic.twitter.com/sPMquaKDdj
— Salar News (@EnglishSalar) October 7, 2025
ஐக்கிய அரபு அமீரகத்துடன் பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அபுதாபி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இவரின் வருகை காரணமாக அங்கிருந்த 3 முனையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு மனைவி
இவருக்கு மொத்தம் 30 மனைவிகள் எனவும், இதில் 15 பேர் மட்டுமே இந்த பயணத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும், பாரம்பரிய 'ரீட் டான்ஸ் விழாவின் போது அவர் ஒரு புதிய மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், முன்னாள் மன்னரான இவரின் தந்தைக்கு 125 மனைவிகள், 210 குழந்தைகள், சுமார் 1000 பேரக்குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
எஸ்வாட்டினியின் மக்கள் 60% பேர் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையில், அந்த மன்னர் தனி விமானத்தில் பயணம் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது விமர்சனத்தை பெற்றுள்ளது. இவர் மில்லியன் டொலர்கள் மதிப்பிலான வாட்ச்களையே அணிவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |