கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம்
15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
கடலில் உயிருக்கு போராடிய 15 வயது சிறுவன்
அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.
கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார்.

மீட்பு மற்றும் தேடுதல் பணி
கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும். அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.
15 வயது சிறுவன் 2 நாட்களாக கடலில் மிதந்த படி உயிருடன் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |