பிரித்தானியாவில் 15 சிறுவனுக்கு கத்திக்குத்து: பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுரை
பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.
15 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
திங்கட்கிழமை மாலை பிரித்தானியாவின் கில்ட்ஃபோர்டு(Guildford) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மாலை 6.10 மணியளவில் ஸ்டோக் பூங்காவிற்கு அருகில் லிடோ சாலையில் வன்முறை தாக்குதல் நடைபெற்றதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.

அங்கு பலத்த காயமடைந்த சிறுவனை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக முதலுதவி சிகிச்சை தொடங்கினர், இருப்பினும் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 வயது சிறுவனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியவும், ஆதாரங்களை திரட்டி குற்றவாளியை விரைவில் கண்டறியவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமை கண்காணிப்பாளர் டெபி ஒயிட் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும், சம்பவம் தொடர்புடைய தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |