ஐ.நாவுக்கு மாற்றாக அமெரிக்காவின் அமைதி வாரியம்: குற்றச்சாட்டுக்களை அடுக்கிய டிரம்ப்
அமெரிக்காவின் அமைதி வாரியம் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் சபையின் முக்கிய பொறுப்புகளை கையில் எடுக்கலாம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அமைதி வாரியம்
அமெரிக்கா தலைமையில் புதிய அமைதி வாரியம் ஒன்று உருவாக்கப்படும் என்று சமீபத்தில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இராஜதந்திர நடைமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் உலக அளவில் நடைபெற்ற பல்வேறு மோதல்களை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் சில முக்கிய பொறுப்புகளை அமெரிக்காவின் அமைதி வாரியம் கையில் எடுக்கலாம் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை பெரிய அளவில் இதுவரை உதவிகரமாக இல்லை. அதே சமயம் ஐ.நா தன்னுடைய திறன்களுக்கு ஏற்றவாறு செயல்படவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஐ.நாவுக்கு மாற்றாக அமைதி வாரியம் அமையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஐக்கிய நாடுகள் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டிய போர்களை, தான் தீர்த்து வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |