அவுஸ்திரேலியாவில் பாடசாலை மீது தூப்பாக்கி சூடு தாக்குதல்: 15 வயது சிறுவன் கைது
அவுஸ்திரேலிய பாடசாலையில் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் துப்பாக்கி சூடு
அவுஸ்திரேலியாவின் வடக்கு பெர்த்தில் டூ ராக்ஸ் பகுதியில் உள்ள அட்லாண்டிஸ் பீச் பாப்டிஸ்ட் பாடசாலையில்(Atlantis Beach Baptist College) மற்றும் அதன் கார் பார்க்கிங் பகுதியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் அப்பகுதியில் இருந்த கார்கள் மற்றும் பாடசாலை கட்டிடங்கள் சேதமடைந்தன. இதையடுத்து பாடசாலை நிர்வாகம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Google Maps
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முன்னாள் மாணவர் கைது
பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்தியது 15 வயது சிறுவன் என்றும், அவன் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பது கண்டறியப்பட்டது.
7News
பின் சம்பந்தப்பட்ட சிறுவனை உடனடியாக கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சிறுவன் எதற்காக பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான் என்றும் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.