திருவிழாவின்போது 150 அடி உயர தேர் கவிழ்ந்து விபத்து.., வெளியான பரபரப்பு வீடியோ
திருவிழாவில் 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவிழாவில் சாய்ந்த தேர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர் என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது.
சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது.
😢 ಹುಸ್ಕೂರು ಜಾತ್ರೆಯಲ್ಲಿ, ದೊಡ್ಡ ನಾಗಮಂಗಲದ ಮತ್ತು ರಾಯಸಂದ್ರ ದ ಎರಡು ತೇರುಗಳು ಮಳೆ ಬಿರುಗಾಳಿಯ ಹೊಡೆತಕ್ಕೆ ಸಿಲುಕಿ ಧರೆಗೆ ಉರುಳಿ ಬಿದ್ದಿದ್ದಾವೆ 🙏🏻 #BengaluruRains pic.twitter.com/ZLV8XM4P5u
— ನಿಶಾ ಗೌರಿ💛❤ (@Nisha_gowru) March 22, 2025
மேலும் தேரின் அடியில் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன.
தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டு ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த லோகித் (வயது 24) என்ற ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இதேபோல், பெங்களூருவின் கெங்கேரியைச் சேர்ந்த ஜோதி (14) என்பவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |