பிரான்சில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் தீ: அணைக்கப் போராடும் 900 தீயணைப்பு வீரர்கள்
பிரான்சில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் தீப்பற்றியெரியும் நிலையில், அதை அணைக்க 900 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு பிரான்சிலுள்ள Gard என்ற இடத்தில் நேற்று இரவு காட்டுத்தீ பற்றிய நிலையில், அது 1500 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள மரங்களை கபளீகரம் செய்துவிட்டது. ஆகவே, மேலும் தீ பரவாமல் தடுப்பதற்காக தீப்பற்றியெரியும் வழியிலுள்ள சில பகுதிகளிலுள்ள மரங்களை தீயணைப்புப் படையினரே தீவைத்துக் கொளுத்தியுள்ளார்கள்.
அதாவது, அந்த இடம் வரை வரும் தீ, அந்த இடம் ஏற்கனவே எரிந்துவிட்டிருப்பதால் அதற்லு மேல் பரவாது என்பதற்காக இந்த நடவடிக்கை.
இது ஒரு பிரம்மாண்ட தீ என விமர்சிக்கும் மூத்த தீயணைப்புப்படை வீரர் ஒருவர், நேற்று இரவு, Bordezac என்ற கிராமத்தின் அருகே அந்த தீ எரியத் துவங்கியதாகவும், அதனால், அதன் அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தீயால் பொதுமக்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீயணைப்பு வீரர்கள் 13 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.