ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 1500 கப்பல்கள்: கேள்விக்குறியாகும் 20,000 மாலுமிகள் நிலை?
ஈரானின் தடை நடவடிக்கை காரணமாக பாரசீக வளைகுடாவில் கிட்டத்தட்ட 1500 கப்பல்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 1500 கப்பல்கள்
ஈரான் தடை நடவடிக்கை காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான கப்பல்களும், அதன் மாலுமிகளும் சிக்கி இருப்பதாக ஐ.நா சர்வதேச கடல்சார் அமைப்பின்(IMO) பொதுச்செயலாளர் வியாழக்கிழமை பனாமாவில் வைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற அமெரிக்காவின் கடல்சார் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அர்செனியோ டொமிங்கஸ் வழங்கிய தகவலில், கிட்டத்தட்ட 20,000 மாலுமிகளும் சுமார் 1500 கப்பல்களும் கடலில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலகின் 80 சதவீத நுகர்வு பொருட்கள் கப்பல் போக்குவரத்து மூலமாகவே கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த கப்பல்களில் சிக்கித் தவிக்கும் பணியாளர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் என்றும் டொமிங்கஸ் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்க படையினர் பாதுகாப்பு வழங்கும் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார்.
ஆனால் இந்த நடைமுறை சில மணி நேரத்திலேயே கைவிடப்பட்டதால் கடல் வழி போக்குவரத்து சிக்கல் தொடர்ந்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |