விடுவிக்கப்பட்ட 1,50,000 உக்ரைனிய வீரர்கள்: 4000 சதுர கிமீ தூரத்திற்கு பின்வாங்கிய ரஷ்ய படைகள்!
உக்ரைன் போரில் இதுவரை 1,50,000 உக்ரைனிய வீரர்கள் விடுவிப்பு.
4000 சதுர கிமீ தூரத்திற்கு ரஷ்ய படைகளை பின்னுக்கு தள்ளிய உக்ரைன்.
ரஷ்ய போரில் இதுவரை குறைந்தபட்சம் 1,50,000 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் Lesia Vasylenko தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல், கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
At least 150K Ukrainians liberated in over 300 towns and villages. Almost 4000 sq km of regained land. Brief smiles, strong embraces and so much uncovered pain. What #Russia leaves behind THREAD ?/1
— Lesia Vasylenko (@lesiavasylenko) September 13, 2022
உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தவறியதை தொடர்ந்து, ரஷ்ய படைகள் பின் நகர்த்தப்பட்டு உக்ரைனின் வடகிழக்கு பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் பணியமர்த்தப்பட்டது.
அதனடிப்படையில் உக்ரைனின் வடகிழக்கு பகுதிகளை பெருமளவு கைப்பற்றி இருந்த ரஷ்ய படைகளிடம் இருந்து உக்ரைனிய படைகள் கடந்த சில வாரங்களாக நடத்தி வந்த எதிர்தாக்குதல் மூலம் பெரும்பாலான பகுதிகளை விடுவித்துள்ளனர்.
இந்தநிலையில் உக்ரைன் நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் Lesia Vasylenko, உக்ரைனில் உள்ள 300க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து இதுவரை குறைந்தபட்சம் 150,000 உக்ரேனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
REUTERS
மேலும் 4000 சதுர கிமீ பகுதியை உக்ரைனிய படைகள் விடுவித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். உக்ரைனிய படைகளின் சமீபத்திய வார தாக்குதலில் ரஷ்ய படைகள் பின்வாங்குவதற்கான அழுத்தம் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உரிய மரியாதை: இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இந்திய தலைவர்!
வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதை மாஸ்கோ சமீபத்திய நாட்களில் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.