குடியுரிமையை கைவிட்ட 16.6 லட்சம் இந்தியர்கள்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை
2022-ல் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 2,25,620 பேர் உட்பட 2011 முதல் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் 2020-ஆம் ஆண்டில் மட்டும் தான் இருப்பதிலேயே குறைந்தபட்சமாக அதிகபட்சமாக 85,256 பேர் குடியுரிமையை கைவிட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குடியுரிமையை துறந்த இந்தியர்களின் ஆண்டு வாரியான எண்ணிக்கையை வெளியிட்டார்.
2015-ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1,31,489 என்றும், 2016-ஆம் ஆண்டில் 1,41,603 பேரும், 2017-ஆம் ஆண்டில் 1,33,049 பேரும் குடியுரிமையைத் துறந்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
2018-ல், இந்த எண்ணிக்கை 1,34,561 ஆகவும், 2019-ல் 1,44,017 பேரும், 2020-ல் 85,256 பேரும், 2021-ல் 1,63,370 பேரும் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,25,620-ஆக இருந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.
2011 முதல் இந்திய குடியுரிமையை துறந்த இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 16,63,440 என அவர் விளக்கினார்.
தகவல்களின்படி, ஐந்து இந்தியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
இந்தியர்கள் குடியுரிமை பெற்ற 135 நாடுகளின் பட்டியலையும் ஜெய்சங்கர் வழங்கினார்.