டிடிவி, ஓபிஎஸ் கூட்டணியில் இணைய செக் - அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்
அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு கூட்டம்
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

அவை தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ளாததால், கே.பி.முனுசாமி தற்காலிக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவு மற்றும் கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
16 தீர்மானங்கள்
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2-5-2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்த பொதுக்குழு முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறது.
[
]
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு வழங்குகிறது.
கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது. கோவைக்கும், மதுரைக்கும் பெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்ற ஸ்டாலின் திமுக அரசு
முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்காக சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SIR) கழகம் வரவேற்கிறது.
நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசின் ஆணையை பெற்று நெல் கொள்முதலை முறையாக முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்ய வேண்டும் என விடியா திமுக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது!
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள், இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள், தமிழக இளைஞர்களுக்கு எட்டாக் கனியாக வேலைவாய்ப்புகள். எனவே போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்.
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கும் நிகழ்வு.
2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது. அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கும் எல்லாம்" என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக மாடல் அரசுக்கு கண்டனம்.
படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களைத் தொடர்ந்து நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கடனாளிகளாக்கும் கண்டனம்!
விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் வல்லவர்கள் திமுகவினர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவரது குடும்ப உறுப்பினர்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேயர் ராஜினாமா என்கிற அளவுக்கு. ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்
சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது. பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாக திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்.

தென்னக நதிகளின் இணைப்பு, கோதாவரி – காவேரி இணைப்பு, ஆனைமலையாறு – பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை தொடர்வதற்கு அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கழக அரசு கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.
நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும். நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்து வரும் எடப்பாடி பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், டிடிவி கூட்டணியில் இணைய செக்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சித்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக கருதும் கூட்டணியில் இருக்க முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |