அமெரிக்காவில் பெற்ற மகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர தந்தை!
அமெரிக்காவில் தந்தை ஒருவர் பெற்ற மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Ohio மாகாணத்தில் வசித்து வருபவர் Hairston. இவருக்கு 16 வயதில் Janae என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி Janae கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் Janae மறுநாள் விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறமாக வந்துள்ளார். இதையடுத்து தூங்கி கொண்டிருந்த Hairston யாரோ வீட்டிற்குள் நுழைவது போன்று சத்தம் கேட்டதால் கையில் துப்பாக்கி எடுத்து கொண்டு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திருடன் என நினைத்து சொந்த மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே அவரது 16 வயது மகள் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் காலை 4.30 மணிக்கு நடந்துள்ளது. மகள் இறந்துவிட்டது தெரியாமல் அவரது தாய் உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளார். பொலிஸ் விசாரணையில் தந்தை தெரியாமல் தனது மகளை சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை இல்லை. துப்பாக்கி லைசென்ஸ் அமெரிக்காவில் பலரிடமும் இருக்கிறது. இதே பகுதியில் டிசம்பர் 7ஆம் திகதி 6 வயது மற்றும் 9 வயது குழந்தைகள் உட்பட 22 வயது நபர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.