பிறந்த குழந்தையுடன் மாயமான 16 வயது தந்தை... சிக்கியபோது வெளிவந்த திடுக்கிடவைக்கும் தகவல்
பதினாறு வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தையான ஒரு நபர், பிறந்த குழந்தையுடன் மாயமானதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டது.
அமெரிக்காவில், Albany என்ற இடத்தில், தன் மகளுக்கு பிறந்த குழந்தையுடன் அதன் தந்தை மாயமாகிவிட்டதாக பொலிசாரிடம் புகாரளித்தார் ஒருவர்.
குழந்தையின் தந்தையான Wisconsin பகுதியைச் சேர்ந்த Logan Kruckenberg-Anderson (16)ஐ பொலிசார் விசாரித்தபோது, தங்களால் வளர்க்க இயலாது என்பதால், தானும் தன் காதலியும் குழந்தையை தத்துக்கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.
அடுத்தநாள் விசாரணையின்போது கதையை மாற்றிவிட்டார் Logan. குழந்தையை வளர்க்க இயலாததால் அதை பனியில் போட்டு மூடிவைத்துவிட்டதாக தெரிவித்தார் அவர். அவர் கூறிய இடத்துக்கு சென்ற பொலிசார், குழந்தை இறந்துகிடப்பதைக் கண்டனர்.
அப்போது குழந்தையின் தலையில் இரு முறை சுடப்பட்ட காயம் இருப்பது தெரியவந்தது. அப்போது பொலிசாரிடம், தான் குழந்தையை சுட்டுக் கொன்றுவிட்டதை ஒப்புக்கொண்டார் Logan.
பொதுவாக சிறுவர்கள் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களது பெயரோ புகைப்படமோ வெளியிடப்படாது.
ஆனால், Wisconsin சட்டப்படி, 10 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மீது முதல் நிலை கொலைக்குற்றம் சாட்டப்படும்போது, தாமாகவே அவர்கள் வயதுவந்தவராக கருதப்பட்டுவிடுவர்.
ஆகவே, திட்டமிட்டு குழந்தையை கொலை செய்துள்ள Logan இன் புகைப்படம் முதலான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், நீதிமன்றமும் அவரை வயது வந்தவராகவே கருதி கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், Loganக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

