16 வயதில் இந்த வயது இளைஞனோடு காதல் தேவையா? புகைப்படத்தை வெளியிட்ட சிறுமி மீது எழுந்த விமர்சனம்.. உடனே நீக்கிய சிறுமி
அமெரிக்காவை சேர்ந்த 16 வயது சிறுமி தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட நிலையில் கடும் விமர்சனம் எழுந்ததால் அதை நீக்கியுள்ளார்.
நடிகையான ஹனி பூ பூ (16) தனது காதலன் டிராலின் கார்ஸ்வெல் (20) உடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து ஹனிக்கு 16 வயதே ஆவதாலும், தன்னை விட 4 வயது மூத்தவரை டேட்டிங் செய்வதாலும் அந்த புகைப்படத்தை பலரும் விமர்சித்தனர்.
ஒருவரின் பதிவில், என்னை விட ஹனி வெறும் 6 மாதங்கள் தான் மூத்தவர், அவருக்கு போய் 20 வயதான காதலரா என பதிவிட்டார்.
மற்றொருவரின் பதிவில், 16 மற்றும் 20? அவர்களின் பெற்றோர் எங்கே என பதிவிட்டுள்ளார்.
இப்படி பலரும் விமர்சித்த நிலையில் தான் பதிவிட்ட புகைப்படத்தை ஹனி நீக்கிவிட்டார்.
ஹனியும், டிராலினும் கடந்த 6 மாதங்களாக டேட்டிங் செய்து வருகின்றனர், இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.