தென் கொரியாவில் 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் கைது: போதைப் பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டு
தென் கொரியாவில் கஞ்சா கடத்திய 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா கடத்திய அமெரிக்க ராணுவ வீரர்கள்
கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்வதற்காக கிட்டத்தட்ட 28,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் தென்கொரியாவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சியோலில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பியோங்டேக்கில் அமெரிக்க வீரர்களின் ராணுவத்தளம் அமைந்துள்ளது.
South Korea and US flags
இந்நிலையில் அமெரிக்க வீரர்கள் ராணுவ பார்சல் சேவையை பயன்படுத்தி கஞ்சா ஆயில் மற்றும் பிற போதைப் பொருட்களை கடத்தி வருவதாக தகவல் வெளியானது.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்து தென் கொரியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
17 அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கைது
விசாரணையின் இறுதியில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் சிலர் கொரிய ராணுவ அதிகாரிகள் சிலரின் உதவியுடன் போதைப்பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
Gyeonggi Nambu Provincial Police
இதையடுத்து 17 அமெரிக்க ராணுவ வீரர்கள், 4 கொரிய ராணுவ வீரர்கள் மற்றும் 1 பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர் என மொத்தம் 22 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆயில் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவம் இருநாடுகளுக்கு மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயர்மட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |