பிரித்தானியாவில் 17 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: தப்பியோடிய தாக்குதல் கும்பல்
பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
புதன்கிழமை மாலை பெட்ஃபோர்ட் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது சிறுவன் தாமஸ் டெய்லர் கொல்லப்பட்டுள்ளார்.
பெட்போர்ட் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கிரீன்ஹில் தெருவில் நடந்து சென்றபோது மாலை 5.50 மணிக்கு இந்த தாக்குதல் நடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத ஆண் குழு தாமஸ் டெய்லரை தாக்கி பலத்த காயங்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும் சிறிது நேரத்தில் காயங்களுக்கு பலியானார்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக பெட்போர்ட்ஷயர் பொலிஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருண்ட நிற ஆடைகளை அணிந்த கறுப்பு நிற ஆண்கள் என்று விவரிக்கப்பட்ட தாக்குபவர்கள், ஹாசெட் தெரு(Hassett Street) மற்றும் கிரேஃப்ரைர்ஸ் கார் பார்க்கிங்(Greyfriars car park) திசையில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |