ஜேர்மன் நகரமொன்றிலிருந்து 17,000 பேர் வெளியேற்றம்: பின்னணி
ஜேர்மன் நகரமொன்றில், 500 பவுண்டுகள் எடை கொண்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
17,000 பேர் வெளியேற்றம்
நேற்று காலை, ஜேர்மனியின் Dresden நகரில், 500 பவுண்டுகள் எடை கொண்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் இடிந்து விழுந்த Carola Bridge என்னும் சாலை மற்றும் பாலத்தின் இடிபாடுகளை கட்டுமானப்பணியாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது அந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வெடிகுண்டை அங்கிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல இயலாது. ஆகவே, அங்கு வைத்தேதான் அது செயலிழக்கச் செய்யப்படவேண்டும்.
எனவே, Dresden நகரில் வாழும் சுமார் 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.
அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டபின், அந்த குண்டை செயலிழக்கச் செய்யும் பணிகள் துவக்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |