133 ராணுவ பணியிடங்களுக்கு குவிந்த 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 133 பிராந்திய ராணுவ பணியிடங்களுக்கு 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குவிந்த இளைஞர்கள்
பிராந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்காக உத்தரகாண்டின் பித்தோராகரில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு தங்குமிடமோ, உணவு அல்லது போக்குவரத்து வசதியோ இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, Territorial Army ஆட்சேர்ப்புக்கான 133 பதவிகளுக்கு உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 18,000 பேர் பித்தோராகரில் குவிந்தனர். அப்போது, இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொலிஸார் தடியடி நடத்தினர்.
பீகார் மாநிலம் தானாபூரில் நடைபெற இருந்த உத்தரபிரதேச மாநில ராணுவ ஆள்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உத்தரபிரதேசத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பித்தோராகருக்கு வரத் தொடங்கினர்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், இடவசதி இல்லாமல் இரவு முழுவதும் சில இளைஞர்கள் சாலைகளிலும் நடைபாதைகளிலும் உறங்குவதை காண முடிகிறது.
उत्तराखंड के पिथौरागढ़ में सेना की TA भर्ती रैली थी, जिसमें बड़ी संख्या में युवा आ गए। युवा जहां भी रोजगार का मौका देखते हैं, पहुंच जाते हैं। इतनी ठंड में बेचारे रात कैसे कटेंगे #Uttarakhand #ARMY #recruitment #PMModi pic.twitter.com/DxL0uFJXpO
— Roshan Gaur रोशन गौड़ (@roshangaur) November 20, 2024
மேலும், பல இடங்களிலிருந்து பித்தோராகருக்குச் செல்ல 10,000 ரூபாய் வரை அதிகக் கட்டணம் வசூல் செய்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |