வதைக்கும் பனிப்புயல்...அமெரிக்காவில் 65 மில்லியன் மக்களுக்கு ஒரே நேரத்தில் எச்சரிக்கை
அமெரிக்காவை தாக்கி வரும் ஆர்க்டிக் வெடிகுண்டு பனிப்புயலால் இதுவரை 28 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு பனிப்புயல்
அமெரிக்காவை வெடிகுண்டு சூறாவளி( bomb cyclone) என்று அழைக்கப்படும் மிக பயங்கரமான பனி புயல் தாக்கி வருகிறது.
கண்மூடித்தனமான பனிப்புயல்கள், உறைபனி மழை மற்றும் கடுமையான குளிர் ஆகியவை மைனே(Maine) முதல் சியாட்டில்(Seattle) வரை மின்தடையை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நியூயார்க்கின் பஃபலோ நகரத்தில் இந்த பனிப்புயல் தனது முழு சீற்றத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது, சாலைகள் முழுவதும் பனி சூழ்ந்து எங்கும் வெண்மை படர்ந்து காணப்பட்டது, இதனால் அவசர கால பதிலளிப்பு முயற்சிகள் முடங்கியது மற்றும் நகரின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
இந்த மோசமான பனிப் புயலின் தாக்கத்தால் அமெரிக்கா முழுவதும் கார் விபத்துகள், மரங்கள் சரிந்து விழுதல் மற்றும் பிற விளைவுகளால் இறப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஃபேலோ நகரத்தில் மட்டும் மூன்று பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், அதில் இரண்டு பேர் தங்கள் வீடுகளில் மருத்துவ அவசரங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Life-threatening situation on I-25 between Wellington Colorado and Cheyenne Wyoming as a blinding whiteout grinds the interstate to a standstill in -30 to -40 windchills. If you are stuck in this absolutely do not turn your car off! Stay warm! @NWSCheyenne @NWSBoulder #cowx #wywx pic.twitter.com/SW98Vha8nB
— Michael Charnick (@charnick_wx) December 22, 2022
தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்
இந்த ஆர்க்டிக் வெடிகுண்டு பனிப்புயலால் 12 பேர் நேற்று வரை உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி இந்த இறப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ-வில் பனி மூடப்பட்ட சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான கார் விபத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். நாட்டின் பெரிய மின்சார கிரிட் ஆபரேட்டர், கிழக்கு அமெரிக்கா முழுவதும் சேவை செய்யும் 65 மில்லியன் மக்களுக்கு இருட்டடிப்பு நடக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.
Heavy lake effect snow, strong winds, and reduced visibilities continue downwind of the Great Lakes. Warm system combined with the arctic airmass will continue producing freezing rain and icing into the passes and colder valleys. Bitter conditions remain across much of the U.S. pic.twitter.com/tHXdYl6cxZ
— National Weather Service (@NWS) December 24, 2022
6 நியூ இங்கிலாந்து மாநிலங்களில், சனிக்கிழமையன்று 273,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்கு உள்ளாகினர். வட கரோலினாவில், 169,000 வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை பிற்பகல் மின்சாரம் இல்லாமல் பாதிப்படைந்துள்ளனர்.
இது தொடர்பாக பென்சில்வேனியா-வை தளமாகக் கொண்ட பிஜேஎம் இன்டர்கனெக்சன், குளிர்ந்த காலநிலையில் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படுவதில் சிரமம் இருப்பதாகவும், 13 மாநிலங்களில் வசிப்பவர்கள் குறைந்தபட்சம் கிறிஸ்துமஸ் காலை வரை மின்சாரத்தை சேமிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.