வெளிநாடு ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு! 18 பேர் பலியான சோகம்
தென் ஆப்பிரிக்காவில் மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடித்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதியில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த கோர சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அதன் பின்னர் துப்பாக்கிச்சூட்டில் தாக்குதலுக்கு உள்ளான 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
PC: Representative image/AFP
உயிரிழந்தவர்களில் பலர் பதின்ம வயதினர் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் சிறிய பேருந்து ஒன்றில் தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
PC: Reuters