பாட்டி பரிசாக அளித்த லொட்டரி மூலம் கோடீஸ்வரனான 18 வயது இளைஞர்! பிறந்தநாளில் அடித்த அதிர்ஷ்டம்
அமெரிக்காவில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது பாட்டி பரிசாக அளித்த லொட்டரி சீட்டின் மூலம் கோடீஸ்வரனாகியுள்ளார்.
பிறந்தநாள் பரிசு
அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் கலேப் ஹெங். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அவரது பாட்டி லொட்டரி சீட்டு ஒன்றை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட கலேப், தனது தாயுடன் மீன் பிடிக்க சென்றபோது லொட்டரியை சுரண்டியுள்ளார்.
@Getty Images
மில்லியனர் ஆன 18 வயது இளைஞர்
அதில் தனக்கு 1 மில்லியன் டொலர்கள் பரிசாக விழுந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்தார். அமெரிக்க சட்டத்தின்படி 18 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே லொட்டரி சீட்டு வாங்கமுடியும்.
தான் 18 வயதை அடைந்ததை உணர்ந்த கலேப் ஹெங், வீட்டிற்கு சென்று அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு பணத்தைப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'எனக்கே இது ஆச்சரியமாகத்தான் உள்ளது. எனக்கு லொட்டரியில் பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நானும் என் அம்மாவும் மீன் பிடிக்க காரில் சென்றுகொண்டு இருந்தோம்.
@ Sharon McCutcheon on Unsplash
அப்போது வழியில் தான் நான் லொட்டரியைச் சுரண்டிப் பார்த்தேன். காரை சற்று நிறுத்திய பின்னர் தான் எங்களால் பரிசு வென்றிருப்பதை உணர முடிந்தது. அதுவும் ஒரு மில்லியன் டொலர்! நாங்கள் இதனை எல்லாம் நினைத்துக் கூட பார்த்தது இல்லை' என திகைப்புடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் லொட்டரியில் வென்ற பணத்தை வைத்து கல்லூரி கட்டணங்களை செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை தன் எதிர்காலத்தில் முதலீடு செய்யப் போவதாக கூறியுள்ளார்.