நள்ளிரவில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 18 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
18 பேர் உயிரிழப்பு
நேபாளத்தின் போகாராவில் இருந்து 35 பயணிகளுடன் தலைநகர் காத்மாண்டை நோக்கி பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.

நள்ளிரவு 1:15 மணியளவில், தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்தை சந்தித்துள்ளது.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை மீட்புபணிகளில் இறங்கியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் நியூசிலாந்தை சேர்ந்த ஆண் பயணி ஆவார். காயமடைந்தவர்களில் ஒரு ஜப்பான் பெண் பயணி மற்றும் டென்மார்க் பெண்பயணி உள்ளனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதிவேக பயணமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |