பிரான்சில் மக்கள் கண் முன்னே கடல் அலைகளில் இழுத்துச் செல்லப்பட்ட 18 பேர்... பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்
பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் 18 பேர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால், அவர்களுக்கு எந்த பாதிப்புமின்றி மீட்புக் குழுவினர் அனைவரையும் மீட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் கடற்கரை ஒன்றில் மக்கள் கண்முன்னே 18 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
Biarritz என்னும் பிரெஞ்சுக் கிராமத்தில் கடற்கரையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
image - euronews
கடல் நீரோட்டம் தொடர்பில் அதிகாரிகள் உயர் மட்ட எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், சிலர் கடலில் 800 மீற்றர் தொலைவு வரை அடித்துச் செல்லப்பட்டார்கள்.
உடனடியாக அங்கு ஹெலிகொப்டர் மற்றும் ஜெட் ஸ்கீ வகை சிறுபடகுகளுடன் விரைந்த மீட்புக் குழுவினர் அந்த 18 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
அலையில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டர் உதவியுடன் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.