96 வயது மூதாட்டியை கரம்பிடித்த 18 வயது இளைஞர்: 78 வயது வித்தியாசத்தில் திருமணம்
18 Year Old Groom Marrying 96 Years Old Woman In Mexico: மெக்சிகோவில் 96 வயது மூதாட்டியை 18 வயது இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
78 வயது வித்தியாசத்தில் திருமணம்
தென் கிழக்கு மெக்சிகோவின் கான்கூன்(Cancún) போன்ற பிரலமான சுற்றுலா தளங்களை கொண்ட குவாண்டானா ரூவில் உள்ள ஒதோன் பி. பிளாங்கோ(Othón P. Blanco) என்ற நகராட்சியில் 96 வயது மூதாட்டியை 18 வயது இளைஞர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
மணமக்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 78 வருடங்கள் இடைவெளி இருப்பது புதிய வரலாறாக பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் புவியியல் நிறுவனத்தின் திருமண புள்ளிவிவர அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய வயது வித்தியாசத்துடன் நடைபெறும் திருமணங்கள் இது முதல் முறை அல்ல.
மிச்சோக்கனின் மொரேலியாவில் 77 வயது வித்தியாசத்தில் 96 வயதுடைய மூதாட்டியை 19 வயது இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் தமெளலிபாஸின் எக்சிகோடென்காட்ல் பகுதியில் 72 வயது வித்தியாசத்தில் 90 வயது முதியவரை 18 வயது இளம் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதன் மூலம் உலகம் முழுவதும் தம்பதிகள் இடையே பாரம்பரிய உறவு முறைகள் தொடர்பான எண்ணங்கள் மாறி வருவது பார்க்க முடிகிறது.