தமிழகத்தில் கொரோனா நிதியாக இதுவரை எத்தனை கோடி வந்திருக்கு தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை
தமிழகத்தில் கொரோனா நிதியாக இதுவரை எவ்வளவு ரூபாய் வந்திருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் கடந்த 11.05.2021-ஆம் திகதி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிக்கு கை கொடுக்கும் வகையில், நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் படி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் இயன்ற நிதியை கொடுத்து வருகின்றனர். இதையடுத்து ஸ்டாலின் சற்று இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 181 கோடி ரூபாய் நிதியாக வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்று வரையில் இன்று வரையில் #Donate2TNCMPRF ரூ.181 கோடி வழங்கியிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!
இன்று வரையில் #Donate2TNCMPRF ரூ.181 கோடி வழங்கியிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!
— M.K.Stalin (@mkstalin) May 23, 2021
நான் உறுதியளித்தபடி தகவல் அனைத்தும் பொதுவெளியில் உள்ளது.
மருந்துகள்- ஆக்சிஜனுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் RTPCR கிட்கள் வாங்கிட ரூ. 50 கோடி ஒதுக்கப்படுகிறது. pic.twitter.com/HCf5jTbZRJ
நான் உறுதியளித்தபடி தகவல் அனைத்தும் பொதுவெளியில் உள்ளது.
மருந்துகள்- ஆக்சிஜனுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் RTPCR கிட்கள் வாங்கிட ரூ. 50 கோடி ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.