பிரித்தானியாவின் மிகப்பெரிய லொட்டரி வெற்றியாளரான நபர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
ஒரே ஒரு லொட்டரி சீட்டிலேயே அதிர்ஷ்டவசமாக 184,000,000 யூரோவை வெற்றி பெற்று பிரித்தானியாவின் மிகப்பெரிய லாட்டரி வெற்றியாளராக மாறியுள்ளார் அந்த நபர்.
இங்கிலாந்தில் வாங்கிய ஒரு டிக்கெட் £184 மில்லியன் யூரோ மில்லியன் ஜாக்பாட்டை வென்றுள்ளது, இது இங்கிலாந்தின் மிகப்பெரிய தேசிய லாட்டரி வெற்றியாளராக மாறியுள்ளது. இதனை லாட்டரி நடத்துனர் கேம்லாட் வெற்றியை உறுதி செய்தார்.
வெற்றியாளர் தங்கள் வெற்றிகளை உரிமைகோர முன்வருவதற்கான காத்திருப்பு இப்போது தொடங்குகிறது. வெற்றியாளர் இந்த பணத்தின் மூலம் இப்போது நான்கு கரீபியன் தீவுகளை வாங்கலாம், சில மில்லியன்கள் மிச்சப்படுத்தலாம் அல்லது லண்டனின் வசதியான ஹைட் பூங்காவில் உள்ள 11 ஆறு படுக்கையறை சொகுசு வீடுகளுக்கு அந்த பணம் சமமானவை என்று கூறப்படுகிறது.
வெற்றியாளர் தேசிய லாட்டரியின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறார். ஏனெனில், 14 பேர் மட்டுமே இதுவரை 100 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான ஜாக்பாட்டை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, முன்னதாக அதிக பரிசுத்தொகை வென்ற பிரித்தானியர் என்ற சாதனை படைத்தவர் கூட அக்டோபர் 2019-ல் 170 மில்லியன் யூரோக்களை தான் வென்றுள்ளார். இப்போது இந்த சாதனையை தற்போதைய வெற்றியாளர் முறியடிக்கவுள்ளார்.
வெற்றியாளருக்கு பரிசுப்பணத்தை பெற 180 நாட்கள் கால அவகாசம் உள்ளன. அவர்கள் வென்ற டிக்கெட் சரிபார்க்கப்பட்டதும், பணம் அவர்களுக்கு வழங்கப்படும். அவரது பெயர் அடையாளம் பொதுவில் அறைவிக்கப்பட வேண்டுமா அல்லது அநாமதேயமாக இருக்க வேண்டுமா என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும்.